அவள் மிகவும் அழகானவள்

கருமேகநிறமுந்தன் கார்கூந்தல்
கடலலையாய் வீசிட.
வானவில்லின் வளைவுகளாய்
உன்புருவங்கள் வளைந்திட.
பறவைகளின் சிறகுகளாய்
உன்னிமையிரண்டும் அடித்திட.

விழியிரண்டும் அவைகயல்மீனின்
கண்களைமிஞ்சிட.
உன்கன்னங்கள் அவைஅப்பிள்
சின்னங்களைவென்றிட.
நீசிரிக்கும்போது உன்னழகான பற்கள்
அவை மாதுளமுத்துக்களாய் யொலித்திட.
உன்இதழிரண்டும் அவைதித்திக்கும்
தேனிலும் தெளிதேனாய் பாய்ந்திட.
உன்கழுத்து அவைஆழ்கடலில்
கண்டெடுத்த அழகானசங்கைவிட உயர்நதிட.
உன்மார்பகங்கள் அவைதாமரைமொட்டைத்தாங்கிடும்
தடாகமொட்டாய் ஆடவரின்கனவுக்குள் புகுந்திட.
உன்பாதங்களின் அசைவினால் கொடியிடை
அதுபின்னழகின் வனப்பில் நடனமிட.

ஒநீவானத்தில் நீந்துகின்ற நிலவோ?அல்ல
வசந்தத்தில் வாழ்கின்ற மலரோ?
நான்கல்லை சிலையாக்கினேன்
வார்த்தைகளை கவிதையாக்கினேன்
மலர்கொண்டு சரம்தொடுத்தேன்
தூரிகைகொண்டு ஓவியம்படைத்தேன்
அதுஎங்கும் உன்னழகுவிம்பங்கள்
இதுவென் ஆத்மாவின் பிரமையல்ல
அதுவுன் அழகுசிகரத்தின் மயக்கம்.

எதிலும் உன்னெண்ணம்
எங்கும் உன்வண்ணம்
நீஅழகின் புதுவண்ணம்
இது என் ஆத்மாவின் உள்ளெண்ணம்
அது ஆண்டவனின் நல்லெண்ணம்
ஆழமான உன்னழகின் படைப்பு
ஆண்டவனின் கைவண்ண வடிப்பு
என்நாடியின் ஓயா அடிப்பு
உன்பெயரின் தேயா துடிப்பு
நான்விடும் முச்சு உன்வசமாச்சு
எந்தன் பேச்சு நீதானாச்சு.

     ஆக்கியோன்
திருமலைத்தென்னவன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: