Archive for April, 2010

காதலைத் தந்த கருவிழிகள்

ஒன்பதாம் வகுப்பில்
ஓரத்து வாங்கினில் இருந்து
ஓரக்கண்ணால் என்னை
புன்முறுவலுடன் பார்ப்பாள்

அவள் பாக்கின்ற பார்வை
கண் விழியின்
கறுப்பு வட்டம்
பாதியாக தெரியும் போது
எவ்வளவு சுகமாக இருந்நது
மீண்டும் மீண்டும் பார்க்கமாட்டாளா
இதயம் ஏங்கித் தவிக்கும்

எழுதும் போது என் பேனா
எதேற்சையாக உடைந்த போது
தன் போனாவை காட்டி
தரவா என்றாள்.

யாருக்கம் தெரியாமல்
கண்ணால் சைகை செய்து
வேண்டாம் என்றேன்

இன்ரவல் நேரம்
என்னருகில் வந்து
கையைப் பொத்தி
என் கைக்குள் திணித்தாள்
கடித்த அவள் ரொபியின்
பாதி என் கைக்குள்.

அவள் விழிகளால் மட்டும்
கதைத்தாள்………
என் இதயத்தில் இருந்து
உணர்வுகள் பொங்கி
சுகமாக இருந்தது

அவள் பார்க்கும் போது
அன்பின் பரிமாற்றத்தை
அள்ளி அள்ளித் தந்தாள்
அது தான் காதல் என்று
எனக்கு புரியவில்லையே….

வருடங்கள் பலஓடியும்
அவளின் விழிகளை
இன்றுவரை நான்
மறக்கவில்லை
ஏன்?
அதுதான் காதலை தந்த
கருவிழிகள்.

ஆக்கம்
திருமலைத்தென்னவன்

முட்கம்பி வேலிக்குள் முடங்கிக் கிடக்கிறோம்

 

சுதந்திரக் காற்றின்றி
சுவாசிக்க தேசமின்றி
முட்கம்பி வேலிக்குள்
முடங்கிக் கிடக்கின்றோம்
பரம்பரை பரம்பரையாய்
பலகாலம் வாழ்ந்த நாம்
படுப்பதற்கு இடமின்றி
பாடாய்த் தவிக்கிறோம்

வந்தவரை வரவேற்று
வாழவைத்தோம் நாமன்று..இன்று
வாடி வதங்குகிறோம்
வாழ்வின்றித் தவிக்கிறோம்
சொத்துக்கள் பல கொண்டோம்;…இன்று
சோத்துக்கு வழியின்றி
பட்டிணியில் கிடக்கிறோம்
மரணத்தை நோக்குகின்றோம்.

சொந்தங்கள் பல கொண்டோம்….இன்று
சுற்றிவரக் கம்பிக்குள்
சோகமுடன் ஏங்குகிறோம்
வேதனையில் வாடுகிறோம்.
சொந்த இடம் இழந்துள்ளோம்
எம்  வீட்டை பறிகொடுத்தோம்
சொல்வதற்கு வார்த்தை இல்லை
நசுக்கப்பட்டோம் அடிபட்டோம்
எறியப்பட்டோம் வீசப்பட்டோம்….இன்று
ஆதரவின்றி அனாதையானோம்.
 
மின்சாரக் கம்பிக்குள்
எம்வாழ்வை எண்ணி எண்ணி
வேதனையில் தவிக்கின்றோம்
நாதையற்றுக் கிடக்கின்றோம்
நாலுபக்கம் அடைபட்டோம் 
நம் வாழ்வை தொலைத்துவிட்டோம்
முட்கம்பி வேலிக்குள்
முடங்கிக் கிடக்கிறோம்
முடங்கிக் கிடக்கிறோம்
மீட்பதற்கு யார்வருவார்?  
மீட்பதற்கு யார்வருவார்?

                                      ஆக்கம்
                                  திருமலைத்தென்னவன்

உயிரின் விலை என்ன?

 

 

வைரமான முத்துக்களை பார்த்தேன்
அந்த முத்துக்கள் என்ன சொத்துக்களா?
தங்கத்தைப் பார்த்தேன்
அந்த தங்கங்கள் என்ன
அங்கத்தை விட மேலானதா?
உலகத்தில் மதிப்பான அத்தனையும்
மனதில் கணக்;குப் போட்டேன்
விலை மதிக்க முடியாத எதுகும்
முடியாத முடிவுக்குள் வருகின்றது
மனித உள்ளங்களே மதிப்பிடுங்கள்
மதிப்பில் மதிக்க முடியாத சொத்து எது?

அறிவும் விவேகமுமா?
வீரமும் சாதனையுமா?
பணமும் பலமுமா?
அந்தஸ்தும் அதிகாரமுமா?
கொடை கொண்ட தியாகமா?
கொண்டாடும் உறவுகளா?
கல்வியும் செல்வமுமா?
வீரமும் அழகுமா?
அத்தனையும் சேர்ந்தாலும்
அடைக்கலாம் மதிப்புக்குள்……. ஆனால்
உறவுகளே! உள்ளங்களே!
கடவுள் தந்த மதிப்பில்லா
நிறைவான பரிசு எது?
மனிதனின் உயிரன்றோ…………….
மனிதா நீ பறித்தால்
எதைக் கொடுத்து மீண்டும் அதை
வாங்கிடுவாய் சொல்லடா?

உயிர்களை பறிக்கின்ற
இலங்கை வான்படையே
இது உன் கொடுமையடா
என்றும் உன் மடைமையடா
உயிர்களை நீ பறிக்காதே
உணர்வுகளை நீ சிதைக்காதே
உள்ளங்களை நீ வதைக்காதே
உலகை நீ பகைக்காதே
போட்டியிடு உன் பகைஞனுடன்
போடாதே குண்டுகளை
அப்பாவி மக்கள்மீது.
எது கொடுத்தும் வாங்கிடுவாய்
உயிர் எடுத்தால் எது கொடுப்பாய்?
உயிருக்கு விலை ஏது?
அதுக்கேது நிகரேது?
உயிர்களை நீ பறிக்காதே
உனக்கு அது உரிமையில்லை
பாவங்களைச் சேர்க்காதே
பாதாளம் சென்றிடுவாய்
உணர்ந்திடு நீ உடனடியாய்
நிறுத்திடு உன் குண்டு வீச்சை.
   

 

     Aperçu de l'image                  

ஆக்கம்
                    திருமலைத்தென்னவன்